ஆத்தங்கரை ஓரத்திலே ஆல மர நிழலினிலே
யாருமற்ற நேரத்திலே விளையாடும் பெண் மயிலே ...
உன்னை பார்த்ததும் என்னாச்சு என் பாதி உயிர் போச்சு ....
உன் அழகை நான் படிக்க துடிக்குத்திதடி என் மூச்சு ....
மத்தாப்பு சிரிப்பு காரி மாதுளாம்பூ நிறத்துகாரி...
காந்தவிழி கண் அழகி கார்மேக குழல் அழகி
உன் பற்கள் எல்லாம் முத்து அடி அதுதான் என் சொத்து ...
உன்னையே நானும் பார்க்க
ஓர கண்ணால் நீயும் பார்க்க
கார்மேகம் கருதிதிடிதுச்சு
கடுமழையும் வந்திடுச்சு ...
ஆரெல்லாம் வெள்ளம் நீ என் அருகிலிருக்கும் வெல்லம் ....
கத்தரிக்காய் கழுத்து காரி கோவைபழம் உதட்டு காரி
மின்னலிடை நடை அழகி மின்சார பேச்சழகி
நீ வைக்குறதது மல்லி என் உள்ளம் ஆகுது சல்லி
ஆயிரம் கனவிருக்கக அயித்தை மகளும் அங்கிருக்க .....
உன் நெற்றி பொட்டு அழகு மட்டும் என் நெஞ்சக்குழியில் நிற்குதடி...
கடும் மழையும் குறையவில்லை கார்மேகம் கரையவில்லை
கை விரல்கள் சேர்ந்திருக்க கால்கள் ரெண்டும் காத்திருக்க ....
ஓடி போகலாம் வர்றியா உன் உள்ளம் எனக்கு தரியா
Sunday, 6 September 2009
New Try.......Own Poem
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment